மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படங்கள் என்றாலே தரமும், வெற்றியும் உறுதி என்பதில் சந்தேகம் இல்லை. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற ஹிட் படங்களுக்கு பிறகு, அந்த வரிசையில் மூன்றாவதாக வெளியாகியுள்ள படம் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மனித நேயத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உலகளவில் வெளியான முதல் நாளில் ரூ.2.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.