- கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று (டிச.,03) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
- இலங்கைக்கு நிவாரண உதவிகள் அனுப்ப இந்தியா வான்வெளியை தர மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் பொய் என்று நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ரஷ்யா அதிபர் புடின் நாளை மறுநாள்( டிச.,4) டில்லி வருகிறார். இதனையடுத்து டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
- தமிழக மக்களின் இதயத்தில் காசி வாழ்கிறது, என காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் கவர்னர் ரவி கூறினார்.
- ரஷ்யா மீதான இந்தியாவின் நட்பு உறவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
- மக்கள் பணத்தைக் கொண்டு பாபர் மசூதியை கட்ட முன்னாள் பிரதமர் நேரு விரும்பினார். ஆனால் அதை சர்தார் வல்லபாய் படேல் முறியடித்தார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
- காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியான ரேணுகா சவுத்ரி பார்லிமென்டுக்கு நேற்று காரில் நாய்க்குட்டி ஒன்றை அழைத்து வந்தது சர்ச்சையான நிலையில், அவருக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
- ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- ஹிந்து கடவுள் குறித்து, சர்ச்சையாக பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க கோரி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 | Retro tamil
