- செப்.13 முதல் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் தொடங்குகிறார். மொத்தம் 14 சனிக்கிழமைகள், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர் பிரசாரம் செய்கிறார்.
- ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு டில்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
- துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கிய உடன், முதல் நபராக பிரதமர் மோடி ஓட்டளித்தார்; பார்லி., வளாகத்தில் காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
- தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் படத்தை பயன்படுத்தக் கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா ராய், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
- முழுமையான ராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது.
- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதித்தது சரியான யோசனை, என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- நேபாளத்தில் மீண்டும் போராட்டம் தொடங்கி உள்ளது. வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு உள்ள போராட்டக்காரர்கள், அதிபர் இல்லத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். பார்லிமென்ட்டுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
- கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சல்லில் ஆய்வு நடத்திய பிரதமர் மோடி, அம்மாநிலத்துக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.















