அதானி சொத்து மதிப்பில் பாதியை விடத்தான் தமிழகத்தில் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு
சாமுவேல்ராஜ் குற்றச்சாட்டு.
மதவெறியை மாய்ப்போம் மக்கள் ஒற்றுமை, மாநில உரிமைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 300 கிலோ மீட்டர் நடை பயணத்தை தொடக்கி வைத்தார்:-
மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதவெறியை மாய்ப்போம் மக்கள் ஒற்றுமை, மாநில உரிமைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரச்சார நடைபயணம் தொடக்க நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் நடந்தது. நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு சாமுவேல்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில குழு சிங்காரவேலன், வட்ட செயற்குழு ஸ்டாலின், துரைராஜ், மாரியப்பன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரச்சார நடைபயணம் திருவிடைக்கழி, திருவிளையாட்டம் அரும்பாக்கம் பனங்குடி நல்லாடை இலுப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக 300 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்று பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இந்த நடைபயணத்தை துவங்கி வைத்து பேசிய மாநில செயற்குழு சாமுவேல் ராஜ் கூறுகையில் மதவெறியை தூண்டும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக இந்த பேரணி நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இயற்கை வளங்களை அதானி அம்பானி டாட்டா பிர்லா கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக இயற்கை வளங்களை தாரைவார்த்து கொடுக்கிறது. 2025- 26 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் தொகை 4.50 லட்சம் கோடி இந்த பட்ஜெட் 8 கோடி மக்களுக்கானது. அந்த அளவிற்கு தான் மாநிலத்தின் நிதி நிலைமை உள்ளது. ஆனால் இந்தியாவில் முதல் கோடீஸ்வரரான அதானி நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டி 11 லட்சம் கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடிதான். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாமுவேல் ராஜா கூறுகையில்
தியாகி வள்ளியம்மை நினைவிடத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதவெறியை மாய்ப்போம் மக்கள் ஒற்றுமை மாநில உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு ஒன்பது தினங்கள் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நடைப்பயண பிரச்சாரம் நடத்துகிறோம்.
மயிலாடுதுறை மண் ஒரு காலத்தில் பண்ணையார்களுடைய ஆண்டைகள் உடைய அட்டூழியத்துக்கு எதிராக மக்களை திரட்டி செங்கொடி இயக்கத்தின் தலைமையில் போராடிய மண். அப்படிப்பட்ட மண்ணில் இன்றைக்கு சாதி வெறியர்கள் மத வெறியர்கள் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்த மோகன் பகத் அவர்கள் நாங்கள் திருப்பரங்குன்ற பிரச்சனையை மேலும் தீவிரப் படுத்துவோம் என்கிறார். பாஜக தலைவர்கள் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்கிறார்கள். அவர்களுக்கு இடதுசாரிகள் சார்பாக நாங்கள் சொல்லிக் கொள்வது அயோத்தி வடபுறத்தில் இருக்கிறது திருப்பரங்குன்றத்தை ஒரு போதும் அயோத்தியாக மாற்ற முடியாது என்பதை தமிழ் மக்கள் பாஜகவிற்கு உணர்த்துவார்கள் என்று நம்பிக்கையோடு மக்களை சந்திக்கிறோம்
தமிழக மக்கள் உரிமைகள், மாநில உரிமைகளை பறித்த பாஜக தற்போது திருப்பரங்குன்றத்தை பிரச்சனையை மையப்படுத்தி மக்களை மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள் அதனை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நூறாண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நடக்கிறது. உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபத்தை ஏற்றுகிறார்கள். இப்போது சொல்லும் இடம் மலைகுன்றிலே இல்லை. மக்கள் மத்தியில் தவறான சித்திரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறோம் என்றார்.

















