தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிஸியாக உள்ளார்.
‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது அவர் இயக்கும் கூலி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்ற விவாதம் ரசிகர்களிடம் சூடுபிடித்தது.

சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை மிர்ணா, லோகேஷ் கனகராஜ் ஜோடியாக இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த கூட்டணி எப்படி இருக்கும் என்பது குறித்து ஏற்கனவே ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.