தமிழக வெற்றி கழகம் சார்பில், மயிலாடுதுறையில், தளபதி விலையில்லா உணவகம் துவக்கப்பட்டது, தினமும் காலை எட்டு மணி முதல் 9 மணி வரை பொதுமக்களுக்கு விலை இல்லாமல் உணவுகள் வழங்கப்படும் என அறிவிப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்காக அலுவலகத்தில் தளபதி விலையில்லா உணவகம் இன்று துவங்கப்பட்டது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சி எஸ் கோபிநாத், ஏழை எளிய பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கி விருந்தகத்தை துவங்கி வைத்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் நாளை நடைபெறுவதை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக இன்று விலையில்லா விருந்தகம் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக கோபிநாத் தெரிவித்தார். தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை இந்த உணவகம் செயல்படும் என்றும் அப்பொழுது வரும் ஏழை எளிய மக்களுக்கு விலை இன்றி காலை உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பைட்: –
சி எஸ் கோபிநாத், மாவட்டச் செயலாளர் தமிழக வெற்றி கழகம் மயிலாடுதுறை மாவட்டம்















