மத்திய பிரதேசத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற 69ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 அரசு பள்ளி மாணவ–மாணவிகள் தமிழகம் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று சிறப்புச் சாதனை படைத்தனர் தனி போட்டியில் பூமிகா என்ற பெண் இந்தியாவில் தமிழகத்திற்கு தங்கம் பெற்றுத் தந்துள்ளார் மேலும் தமிழக மகளிர் அணி தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் தலா 3 பிரிவுகளில், 17 வயதிற்குள் மற்றும் 14 வயதிற்குள் உள்ள மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், பலர் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழக மாணவர்கள் முதல் முறையாக தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை முன்னிட்டு இன்று காலை விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த மாணவர்களை, விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மாணவர்களின் உறவினர்கள், உடன் படிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அவர்களை சால்வை நினைத்தும் சந்தன மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர் .
மேலும், இத்தகைய தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், தற்போது போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சொந்த செலவில்(₹11500) பயணம் செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
வருங்காலங்களில் மேலும் பல மாணவர்கள் இத்தகைய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற, அரசு சார்பில் நிதி மற்றும் சிறப்பு பயிற்சி ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
பேட்டி: தங்கம் வென்ற மாணவிகள் பெயருடன் பேட்டி உள்ளது.
