September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மகளை பார்க்கச் சென்ற துனை நடிகை பிரேமபிரியா தாக்கப்பட்டதாக புகார்

by Satheesa
September 28, 2026
in News
A A
0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மகளை பார்க்கச் சென்ற துனை நடிகை பிரேமபிரியா தாக்கப்பட்டதாக புகார் –

மமகளை பார்க்கச் சென்ற துனை நடிகை பிரேமபிரியா தாக்கப்பட்டதாக புகார் –

மகளின் கணவர் பிரவீன் ராஜ், அவரது அண்ணன் ஸ்ரீ பன்ராஜ், தந்தை ஆனந்தராஜா, தாய் வனிதா மீது குற்றச்சாட்டு

விழுப்புரம் அருகே தனது மகளை பார்க்கச் சென்றபோது தன்னை தாக்கியதாக நடிகை பிரேமபிரியா, தனது மகளின் கணவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பிரேமபிரியா, கடந்த 20 ஆண்டுகளாக சினிமா துறையில் நடித்து வருவதாகவும், நடிகர்கள் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி உள்ளிட்டோருடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த பலரை இழந்ததாகவும், அதன்பிறகு தனியாக தனது மகளை வளர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மகளை பட்டப்படிப்பு படிக்க வைத்ததாகவும், விழுப்புரத்தில் இடம் வாங்கி வீடு கட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு வந்த தொடர்பு.
இந்த நிலையில், தன்னுடன் நான்காம் வகுப்பு படித்த நன்பி வனிதா தனது மகனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பம் தெரிவித்ததாக பிரேமபிரியா கூறியுள்ளார்.தான் தனியாக இருப்பதால் தன்னையும் தனது மகளையும் பார்த்துக்கொள்வதாகவும், மகளை நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் அந்த குடும்பத்தினர் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் வார்த்தையை நம்பி மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்ததாகவும், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில் பிரமாண்டமாக நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் பிரேமபிரியா கூறியுள்ளார்.

மாப்பிள்ளை மீது கஞ்சா வழக்கு இருப்பது தெரியவந்ததாக குற்றச்சாட்டு.
நிச்சயதார்த்தம் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, நண்பர் ஒருவர் அனுப்பிய வீடியோ மூலம் தனது மகளுக்கு திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளை பிரவீன் ராஜ் மீது கஞ்சா வழக்கு இருப்பது தெரியவந்ததாக பிரேமபிரியா தெரிவித்துள்ளார். மாப்பிள்ளை வழக்கறிஞராக இருப்பதாக கூறியதன் அடிப்படையிலேயே திருமணத்திற்கு சம்மதித்ததாகவும், ஆனால் அவர் மீது ஆறு மாதங்களுக்கு முன்பு காணை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக பின்னர் தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவரத்தை தங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் மறைத்ததாக மாப்பிள்ளை குடும்பத்தினரிடம் கேட்டபோது, அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என தனது நம்பி வினிதா உள்ளிட்டவர்கள் உறுதியளித்ததாகவும் பிரேமபிரியா தெரிவித்துள்ளார்.தனது மகளும் அந்த திருமணத்தில் பிடிவாதமாக இருந்ததால், திருமணத்தை தடுக்க முடியாமல் சம்மதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பதிவு திருமணத்தில் தானே கையெழுத்திட்டதாக தகவல்
மகளை அப்படியே விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், பதிவு திருமணத்திற்காக தானே சென்று கையெழுத்திட்டு திருமணம் செய்து வைத்ததாக பிரேமபிரியா தெரிவித்துள்ளார்.பின்னர் மாப்பிள்ளையின் ஊரில் உள்ள கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், மகளுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியதாகவும், சில நகைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
இதற்கிடையே குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக மகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், மாப்பிள்ளையை பார்க்கும்போதெல்லாம் திருமணம் தொடர்பான விஷயங்களில் தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்து மனவேதனை ஏற்பட்டதாகவும் பிரேமபிரியா கூறியுள்ளார். இதனால் மகளிடம் தான் கோபமாக பேசியதாகவும், திட்டியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக மகளும் தன்னுடன் பேசாமல் இருந்ததாகவும், சுமார் 25 நாட்கள் மகளுடன் தொடர்பு இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இரவு 10.30 மணிக்கு மகளை பார்க்கச் சென்றதாக தகவல்
இந்த நிலையில், தனது மகளை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மகள் வசிக்கும் குழந்தைவேல் நகர் வீட்டிற்கு சென்றதாக பிரேமபிரியா தெரிவித்துள்ளார். அங்கு மகளை அழைத்ததாகவும், மகள் வெளியே வராத நிலையில், அவரது மாமியாருடன் (வனிதா) உடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மகளை தன்னிடம் இருந்து பிரித்து வைத்திருப்பதாகவும், திருமணம் தொடர்பான சில தகவல்களை மறைத்து தன்னை ஏமாற்றியதாகவும் கூறி தான் ஆவேசமாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

நான்கு பேர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு
அப்போது தன்னை மகளின் கணவர் பிரவீன் ராஜ், அவரது அண்ணன் ஸ்ரீ பன்ராஜ், அவரது தந்தை ஆனந்தராஜா, தாய் வனிதா உள்ளிட்டோர் தாக்கியதாக பிரேமபிரியா புகார் தெரிவித்துள்ளார்.தன்னை பலர் சேர்ந்து தாக்கியதாகவும், மார்பு, தலை ,கை,கால் உள்ளிட்ட பகுதியில் கட்டையால் தாக்கியதாகவும் மார்பில் உதைத்ததாகவும், இதன் காரணமாக உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது மகள் அந்த நேரத்தில் தன்னை தடுக்க முயன்றதாகவும், ஆனால் அவர் அமைதியான குணம் கொண்டவர் என்பதால் பெரிய அளவில் எதிர்த்து செயல்பட முடியவில்லை என்றும் பிரேமபிரியா தெரிவித்துள்ளார்.

முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை
தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் பிரேமபிரியா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்தபோது, அடிதடி தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், தற்போது காவல்துறையினர் விசாரணைக்காக தன்னை அழைத்து வருவதாகவும் பிரேமபிரியா கூறியுள்ளார்.

“எனக்கு பணம் எதுவும் தேவையில்லை; மகள் என்னிடம் பேச வேண்டும்”
தனக்கு தனது மகளிடம் இருந்து பணமோ, வேறு எந்த உதவியோ தேவையில்லை என்றும், மகள் தன்னுடன் பேச வேண்டும் என்பதே தனது ஒரே கோரிக்கை என்றும் பிரேமபிரியா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தனது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை இழந்த நிலையில், தனது மகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாகவும், மகள் தன்னுடன் பேசாமல் இருப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை தனிமைப்படுத்தி தனது மகளை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாகவும், தன்னைப் பற்றி மகளிடம் தவறான தகவல்களை கூறி அவரது மனதை மாற்றியுள்ளதாகவும் பிரேமபிரியா குற்றம் சாட்டியுள்ளார். மகள் தன்னுடன் பாசமாக பேசத் தொடங்கினால் திருமண வாழ்க்கையை விட்டு தன்னிடம் வந்துவிடுவார் என அவர்கள் அஞ்சுவதால், மகளை தன்னுடன் பேச விடாமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது மகள் வசிக்கும் வீட்டிற்கே மகளை பார்க்கச் சென்ற நிலையில் தன்னை தாக்கியதாக கூறியுள்ள பிரேமபிரியா, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்றும், தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை யாரிடம் சென்று கூறுவது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பிரேமபிரியா அளித்த புகாரின் அடிப்படையில், பிரவீன் ராஜ், ஸ்ரீ பன்ராஜ், ஆனந்தராஜா, வனிதா ஆகியோர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தாக்குதல் நடத்திய நான்கு நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தனது மகளை பார்த்து பேச அனுமதிக்க வேண்டும் என்பதே நடிகையின் கோரிக்கையாக உள்ளது.

நடிகை பிரேமப்பிரியா கண்ணீர் மல்க கொடுத்த பேட்டி உள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன் 50 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றி கொலை மிரட்டல்

Next Post

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
Next Post
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

November 26, 2025
பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

May 7, 2025
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.