August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுதர்சனம் கொலை வழக்கு : பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறை

by Priscilla
November 24, 2025
in News
A A
0
சுதர்சனம் கொலை வழக்கு : பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை சுட்டுக் கொன்ற வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 4ஆவது குற்றவாளி ஜெயில்தார் சிங் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டார்.

2005 ஜனவரி 9ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த சுதர்சனம், கதவைக் கொட்டிய சத்தத்தைக் கேட்டு கீழே வந்த போது, முகமூடியுடன் நுழைந்த பவாரியா கொள்ளையர்களை பார்த்து கத்தினார். இதையடுத்து கொள்ளையர்கள் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்று, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சுதர்சனம் மட்டுமின்றி, அவரது மனைவி மற்றும் மகனும் தாக்குதலுக்கு உள்ளானது அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்துக்குப் பிறகு அதற்கான விசாரணையை தீவிரப்படுத்த அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறப்பு படையை அமைக்க உத்தரவிட்டார். ஐஜி ஜாங்கிட் தலைமையிலான அந்த படை, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்தது. இவர்களில் சிலர் ஜாமீனில் வெளியேறி தலைமறைவாகியதுடன், 2 பேர் சிறையில் உயிரிழந்தனர்.

20 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு, தற்போது சிறையில் இருந்த ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜாமீனில் இருந்து வழக்கை சந்தித்த ஜெயில்தார் சிங் ஆகிய நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜரானனர். இதில் முதல் மூவர் குற்றவாளிகள் என நிரூபித்த நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

பவாரியா கும்பல் தலைவன் ஓம் பிரகாஷின் மருமகனான ஜெயில்தார் சிங், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்து கும்பலுக்கு பங்கிட்டதாக போலீசார் கூறியிருந்தாலும், சுதர்சனம் கொலை வழக்கில் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, சுதர்சனம் குடும்பத்தாரின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு பதிலளித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Tags: Bavaria Robberslife imprisonmentmurder caseSudarshanam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“மோடி, அமித்ஷா அவ்வளவு நேர்மையானவர்களா?” – திருமாவளவன் சுட்டிக்காட்டல்

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 25 November 2025 | Retro tamil

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 25 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 25 November 2025 | Retro tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.