மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்’பில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான கைப்பந்து, மற்றும் கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளில் 250க்கம் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு:-
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மயிலாடுதுறை குறுவட்ட அளவிலான கைப்பந்து, மற்றும் கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. பள்ளி நிர்வாக செயலர் பாஸ்கர் மற்றும் பள்ளி முதல்வர் சரவணன் போட்டிகளை தொடங்கி வைத்தனர். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக 14, 17, 19 வயது என தரம் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. கைப்பந்து இறுதிப்போட்டியில் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், ஏடிஎஸ் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியும், இரண்டாம் இடத்தை செயின்ட்பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் வென்றது. மேசைப்பந்து போட்டியில் மாணவர் பிரிவில் குருஞானசம்பந்தர் முதலிடம் ரோட்டரி பள்ளி இரண்டாம் இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் 14 வயது போட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.














