பல மாதங்களாக கீழே சாய்ந்து விழுந்த பெயர் பலகையால் அடையாளம் தெரியாமல் சார் பதிவாளர் என் 2 க்குச் செல்ல பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி பகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் எண் 2 இயங்கி வருகிறது.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் புதியதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து பத்திரப்பதிவு செய்து வரும் நிலையில் திருப்பத்தூர் ஊத்தங்கரை முக்கியசாலை ஓரமாக வைக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை சுட்டிக்காட்டும் பெயர் பலகை பல மாதங்களாக கீழே சாய்ந்து விழுந்துள்ளது இதனால் புதிய அலுவலகத்திற்கு வருகின்ற பொதுமக்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அவதியுற்று வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் சிரமத்தை குறைக்க பெயர் பலவையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.













