மாணவனை வகுப்பறையை விட்டு வெளியே அமர வைத்து காலாண்டு தேர்வு எழுத வைத்த உதவி தலைமை ஆசிரியர்! ரிப்போர்ட்ன்னா உள்ள வருவியா காம்பவுண்டு விட்டு வெளியே போ செய்தி சேகரிக்க சென்ற நிருபரை ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலாண்டு பொதுத் தேர்வு நடைபெற்று உள்ளது. அதில் சரியாக படிக்காத மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளிய அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
அப்போது தனது மகனை அப்பளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் என்பவர் வகுப்பறையை விட்டு வெளிய அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறி அந்த மாணவனின் பெற்றோர் செய்தியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்போது அங்கு சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் அதனை செய்தியாக சேகரித்துள்ளார்.
இதனை அறிந்த உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் சக ஆசிரியர்கள் செய்தியாளரை சுற்றுப்போட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதுமட்டுமின்றி யாரை கேட்டு உள்ள வந்தீங்க, பள்ளியின் காம்பவுண்ட விட்டு வெளியே போ, என ஒருமையில் பேசி செய்தியாளரை அவமானப்படுத்தினார்.
இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் ஒரு தலைமையாசிரியரே இதுபோல அநாகரிகமாக நடந்து கொண்டால் பள்ளியில் மாணவர்கள் எப்படி நற்பண்புகள் வளரும் என பேச பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.













