• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சபரிமலை | இறங்குதளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் !

by Priscilla
October 22, 2025
in News
0
சபரிமலை | இறங்குதளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் !
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர், சபரிமலை அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட இறங்குதளத்தில் சிக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நான்கு நாள் பயணமாக கேரள வந்திருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று டில்லியிலிருந்து திருவனந்தபுரம் வந்தடைந்தார். அங்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இன்று காலை, சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனம் செய்ய திருவனந்தபுரத்திலிருந்து பத்தனம்திட்டா நோக்கி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். பத்தனம்திட்டா மாவட்ட உள்விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் ஹெலிபேடில் இறங்கும்போது, ஹெலிகாப்டர் சக்கரம் தளத்தில் சிக்கிக் கொண்டது.

உடனே பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ஹெலிகாப்டரை தள்ளி சீராக நிறுத்தினர். எந்தவித சேதமும் அல்லது உயிர் இழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை காரணமாக முன்பாக திட்டமிட்டிருந்த நிலக்கல் இறங்குதளம் மாற்றப்பட்டதால், அவசரமாக புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டிருந்தது. அது முழுமையாக காயவில்லை என்பதே சிக்கலுக்குக் காரணமாக கூறப்படுகிறது.

பின்னர் சாலை வழியாக சபரிமலை புறப்பட்ட குடியரசுத் தலைவர், பம்பை பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து, தேவஸ்வம் போர்டின் “கூர்கா” வாகனத்தில் மலையேற்றப் பாதை வழியாக பயணம் செய்தார். அவருடன் “பிபிஜி” பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் இணைந்திருந்தனர்.

அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, மீண்டும் அதே வழியாக நிலக்கல் வந்தடைந்து, அங்கிருந்து திருவனந்தபுரம் நோக்கி ஹெலிகாப்டர் மூலம் திரும்புவதாக தகவல்.

Tags: droupadi murmuHelicopterindian presidentlanding padsabarimala
Previous Post

‘Dude’ படத்தில் அனுமதியின்றி என் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன – இளையராஜா

Next Post

திமுக பிரதிநிதிகள் மக்களை காக்க களத்தில் இறங்குங்கள் – உதயநிதி

Related Posts

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

November 26, 2026
மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்
News

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

November 26, 2026
TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
News

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

November 26, 2026
Next Post
திமுக பிரதிநிதிகள் மக்களை காக்க களத்தில் இறங்குங்கள் – உதயநிதி

திமுக பிரதிநிதிகள் மக்களை காக்க களத்தில் இறங்குங்கள் - உதயநிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

by Satheesa
November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

by Satheesa
November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

by Satheesa
November 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6