உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி!
:
உலக போலியோ தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இன்று மாபெரும் போலியோ விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை, விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) . ஆர். சோமசுந்தரம் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். சிவகுமார் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கினார். விழுப்புரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் . N. ராமகிருஷ்ணன் அவர்கள், சங்கச் செயலாளர் . தீபக்கண்ணன், பொருளாளர் K. சண்முகசுந்தரம், . கன்னியா ரமேஷ் மற்றும் போலியோ சேர்மன் . P. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணி வா.உ.சி. தெரு, திரு.வி.க. தெரு, காமராஜர் தெரு, எம்.ஜி. ரோடு மற்றும் கிழக்கு பாண்டி சாலை வழியாகச் சென்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
பேரணியில் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, இ.எஸ். நர்சிங் கல்லூரி, இ.எஸ். கல்லூரி (B.Ed.) மற்றும் சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினர்.
இப்பேரணி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறையினருக்கும், பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கும், கல்லூரி நிர்வாகத்தினருக்கும் விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

















