34 ஆண்டுகளை கடந்து சந்திக்கும் முன்னாள் மாணவர்கள்
விழுப்புரம் ரயில்வே உயர்நிலை பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் ரயில்வே உயர்நிலை பள்ளியில் கடந்த 1992ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் 34 ஆண்டுகளை கடந்து சந்திக்கும் முன்னாள் மாணவர்கள் தங்களின் பசுமையான பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் தற்போது உள்ள பணியின் நிலை, குடும்பத்தார் குறித்தும், சக நண்பர்களின் தற்போதைய நிலை பற்றியும் பேசி பரிமாறி கொண்டனர். இறுதியாக, அவர்கள் மூடப்பட்ட ரயில்வே உயர்நிலை பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் பள்ளி மாணவர்கள் விஜய் ஆனந்த், ஜெரார்டு டுமினர், கோபி ஆகியோர் செய்திருந்தனர்.
















