மயிலாடுதுறை அருகே ஊராட்சிக்கு சொந்தமான தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்டு தர வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மயிலாடுதுறை திருவாரூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சள் வாய்க்கால் பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. நீர்நிலை புறம்போக்கு என்று அரசு ஆவணங்களில் உள்ள இந்த குளத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபர் ஆக்கிரமித்து மீன்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இது குறித்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு மனு கொடுத்தும் குளத்தை மீட்டு தர வருவாய் துறைனர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் அரசுக்கு சொந்தமான குளம் என்று அறிவிப்ப பலகை அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பலகையையும் குளத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள தனி நபரின் ஆட்கள் பிடுங்கி எறிந்துள்ளனர். இதற்கான சிசி டிவி காட்சிகள் உடன் வருவாய்த்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் இன்று கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மயிலாடுதுறை திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்து வரும் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டுள்ளன. காலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர் கிராம மக்களுடன் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர . ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கிராம மக்கள் அறிவிப்பு செய்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

















