May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

இராமானுஜர்

by Satheesa
September 27, 2025
in Bakthi
A A
0
இராமானுஜர்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்! அவதாரம் என்றென்றும் நிலைத்திருக்கும் இராமானுஜர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. இராமானுஜரின் பூதவுடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

கோடிக்கணக்கான மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீராமானுஜர் 1017ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவராவார். வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இவர் தனது 120 ஆவது வயதில் உயிர் நீத்தார்.
எனினும் மறுநாளே அவ்வுடல் மேலெழுந்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

தியானத்தில் அமர்ந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டு செய்யப்பட்ட தைலம் பூசப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இவருக்கு முதல் வழிபாடு நடந்த பிறகே ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீராமானுஜர் பக்தர்கள் வேண்டிய வரங்களை வாரி வழங்க கூடியவராக இருக்கிறார்.

இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரமும், குங்குமப்பூவும் கொண்டு அபிஷேகம் செய்து வருகிறார்கள். அமர்ந்த நிலையில் சற்றே பெரிய திருமேனியாக இராமானுஜரை இன்றும் நாம் ஸ்ரீரங்கத்தில் இராமனுஜர் சந்நிதியில் தரிசிக்கலாம்

ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்ரீராமனுஜர் சந்நதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று அறிவது இல்லை, சந்நதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து கடந்துப் போகிறார்கள்.

இராமானுஜர் திருமேனி ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை பிரதி~;டை செய்தார்கள்.
அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

அவரது உயிர் பிரிந்த உடனே: தர்மோ அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்பர்.
நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த ஆடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி, அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை
நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த ஆடையையும் சூடிக்களைந்தத் தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீசூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு, இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும், ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை
சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது.

திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

இதனைதொடர்ந்து இராமானுஜர் நூற்றந்தாதி ஓதியபடி ஸ்ரீரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.
ஸ்ரீ ரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர்.

மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன்
வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது தரிஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன் “இராமானுஜன் என்தன் மாநிதி என்றும் இராமனுஜன் என்தன் சேமவைப்பு” என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்! அரங்கன். அதாவது இராமானுஜர், எனது மிகப் பெரும் செல்வம்; எனது சேமநிதி! என அரங்கன் திருவாய் மலர்ந்தருளினார்.

அரங்கன், இராமரின் தம்பி இலட்சுமணரின் அவதாரமான இராமனுஜரை என்றென்றும் பாதுகாத்து வைத்திட அருள் செய்தார். அப்படியானால் பிற சிரஞ்ஜீவிகளைப்
போல இவரையும் ஏன் என்றென்றும் உயிரோடிருக்கச் செய்யவில்லை என்றால், கலியுகம் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை! எனலாம். உயிர் பிரிந்து பூதவுடலானாலும் திருமேனி எப்போழுதும் அடையாதிருப்பதே இறைபக்தி மற்றும் இறை நம்பிக்கையற்றவர்கள் இதைக் கண்ணாரக் கண்டு, அறிவு பெற்றிட வேண்டும்! என்பது திருமாலின் திருவுள்ளமாக இருக்கலாம்.

எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் சந்நதிக்குள்ளேயே, திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி.

இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக்
காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சந்நதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர்.

இவ்வுலகில் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்றான எட்டெழுத்து மந்திரம் ஆக இருக்கும், ஓம் நமோ நாராயணாய என்னும் திருமாலின் ~க்தி மந்திரம் ஆகும்.
ஓம் நமோ நாராயணாய என்று எவர் ஒருவர் உச்சரித்தாலும் அவருக்கு வரும் இன்னல்கள் யாவும் மலை போல் வந்தாலும் பனி போல் விலகும் என்பது நம்பிக்கை.

இம்மந்திரத்தை பக்தர்களுக்கு தன் குருவையும் மீறி வெளி உலகிற்கு கூறியதால் அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் உண்டானது. எனினும் அவர் தன் கடைசி காலம் வரை வைணவ குலத்திற்கு தொண்டுகள் செய்தே மோட்சம் பெற்றார்.

ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை கலைய மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழைய புரட்சி செய்தார். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை இவ்வுலகிற்கு அறிவுறுத்தினார். இவரின் பெருமைகளை சொல்லும் பொழுதே நமக்கு மெய் சிலிர்க்கும்.

Tags: aanmigamdivonationalRamanujarSrirangamSrirangam Templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் : 18 வயதான ஷீத்தல் தேவி வரலாறு படைத்தார்

Next Post

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

Related Posts

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்
Bakthi

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்
Bakthi

திருத்துறைப்பூண்டி முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா

May 3, 2026
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்
Bakthi

எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம் tvk தொண்டர்களால் பரபரப்பு

May 3, 2026
Next Post
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.