September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தட்டாங்குளம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் MLA-மீது அலட்சிய குற்றச்சாட்டு

by Satheesa
June 15, 2026
in News
A A
0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மாதவரம் தட்டாங்குளம் சாலையில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் எம்.எல்.ஏ. மீது அலட்சிய குற்றச்சாட்டு

சென்னை, மாதவரம்:

சென்னை மாதவரம் தட்டாங்குளம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) மதுபான கடை எண் 8836 பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இந்த மதுபானக் கடை இயங்கி வருவதால் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மதுபானக் கடைக்கு வரும் நபர்களால் அடிக்கடி தகராறு, மது அருந்திய நிலையில் சாலைகளில் அசம்பாவித செயல்கள், பெண்களிடம் அத்துமீறல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இந்த மதுபானக் கடை செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கடை தொடர்ந்து இயங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் கூறினர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக அந்த மதுபானக் கடையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபுவிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்ததாகவும், நேரடியாகவும் கோரிக்கை வைத்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

“மாதவரம் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய மக்கள் பிரதிநிதி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மாதவரம் பகுதியில் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், தட்டாங்குளம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை குறித்து அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூட இந்த மதுபானக் கடை அருகே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மது பாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மேலும், மதுபானக் கடைக்கு வரும் வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் ஒழுங்கின்றி நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு, பெண்களின் நலன், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு, மாதவரம் தட்டாங்குளம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு.. இப்படிக்கு இருக்குமா என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்….

Tags: district newstamilnadutasmacThattankulam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தண்டலம் ஊராட்சியில்10-வகுப்பு&12-வகுப்பு முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டஉதவி வழங்கும் விழா

Next Post

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம்

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
Next Post
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

August 21, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

மயிலாடுதுறையில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.