August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சிவகங்கை புறவழிச்சாலை பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி!

by sowmiarajan
December 12, 2025
in News
A A
0
சிவகங்கை புறவழிச்சாலை பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மாவட்டத் தலைநகரான சிவகங்கையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியான ரயில்வே கிராசிங் பாலப் பணிகள், ரயில்வே துறையின் தாமதமான ஒப்புதல் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டதால், அப்பணிகளை விரைந்து முடித்து பாலத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை நகரின் வழியே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இரண்டு புறவழிச்சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஒரு புறவழிச்சாலை (திருப்புத்தூர் சாலை மற்றும் மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை) பயன்பாட்டில் உள்ளது.

இரண்டாவது புறவழிச்சாலையான திருப்புத்தூர் சாலையில் உள்ள காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் உள்ள வாணியங்குடி வரை சாலை அமைக்கும் பணி மட்டும் நீண்ட காலமாகத் துவங்கப்படாமல் இருந்தது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்தச் சாலை, சுமார் 10.6 கி.மீ நீளமுடையதாகும். இச்சாலை சூரக்குளம், கீழக்கண்டனி ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து செல்கிறது. இச்சாலையின் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், காஞ்சிரங்கல் ஊராட்சிப் பகுதியில் இருந்து மொத்தம் 10.6 கி.மீ தூரத்திற்குப் புறவழிச்சாலை அமைக்க ரூ. 109.51 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டது. முதற்கட்டமாக, மொத்தம் 7 கி.மீ தொலைவிற்கு ரூ. 77.16 கோடியில் சாலை அமைக்கும் பணி கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. காஞ்சிரங்காலில் இருந்து தொண்டி சாலை இணைப்பு, பழமலை நகர், ஆயுதப்படை குடியிருப்பு வழி இளையான்குடி சாலை இணைப்பு வரை சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டன.

ஆனால், இந்தப் புறவழிச்சாலையின் முக்கியமான பகுதியான காஞ்சிரங்கால் ரயில்வே கிராசிங்கில் உள்ள பாலப் பணிகள் மட்டும் தண்டவாளங்களுக்கு மேல் செல்லும் பகுதியில் நடைபெறவில்லை. மற்ற பகுதிகளில் பாலப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்து விட்டன. மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தூரத்திற்கு மட்டும் பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில், தண்டவாளங்களுக்கு மேல்புறம் பாலம் அமைக்க ரயில்வே துறையின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே பணி துவங்குவதில் காலதாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போதுதான் பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலம் துவங்கும் இடம் வரை மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கூறுகையில், ரயில்வே துறை ஒப்புதல் வழங்க தாமதம் செய்ததால் தான் ரூ. 109.51 கோடி செலவில் தற்போது சாலை அமைத்தும் அது முழுமையாகப் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். மேலும், இந்தப் பிரச்னையால் தொடர்ந்து விபத்துகளும் நடந்து வருகின்றன என்று வேதனை தெரிவித்தனர். எனவே, தண்டவாளத்திற்கு மேல் செல்லும் பகுதியில் பாலப் பணிகளை விரைந்து முடித்து, புறவழிச்சாலையை முழுமையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: infrastructure newspublic discontentroad construction delaySivaganga bypasstamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பருவமழை நீடித்ததால் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள் பூக்கவில்லை பயணிகள் ஏமாற்றம்

Next Post

‘சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!’ அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
‘சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!’ அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

'சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!' அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.