பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
போதை ஒழிப்பு நடவடிக்கையாக ஆவடி காவல் ஆணையரக காவல் ஆணையாளர் திரு.சங்கர், ஐPளு அவர்கள் உத்தரவுப்படியும், காவல் கூடுதல் ஆணையாளர்
திருமதி.பவானீஸ்வரி, ஐPளு அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் அவர்களின் அறிவிறுத்தலின்படி, ரோந்துப் பணியில் ஈடுபட்ட பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர்
திருமதி. னு.சுபா~pனி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி. புவனேஸ்வரி ஆகியோர்கள் கொண்ட குழு, பூந்தமல்லி நெடுஞ்சாலை அம்பேத்கர் சிலை அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற நபரை சோதனை செய்தனர்.
அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரைச் சேர்ந்த சிவசங்கர் ஆகிய அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பூந்தமல்லி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ய அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
