சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு தொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்ககோரி மனு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி செம்பதனிருப்பை சேர்ந்த மோகன் என்பவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் மற்றும் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோருடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் மனு அளித்தனர்.. அந்த மனுவில் சீர்காழியில் இயங்கிவரும் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஒன்றில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருபவர் வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு வரும் பெண்களின் செல்போன் நம்பருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதும், ஒருசில பெண்களுக்கு பாலியல்தொல்லை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து கடந்த வாரம் புகார் அளத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவரிடம் வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு சென்ற பல பெண்கள் இவரது பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். வெளியில் சொல்லமுடியாமல் தவித்துவரும் பெண்களை காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் பொதுமக்களுடன் இணைந்து மனுஅளித்துள்ளோம். இது குறித்து காவல்துறை மூலம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் குறிப்பிட்டுள்ளார்.













