சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி பரிபூரண லோக ஷேம சப்தச மகாயாகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் கடைமடையான டெல்டா பகுதியில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கிராமப்புற மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை போக்கும் விதமாகவும் மழைபெய்து காவிரியில் தண்ணீர் வரவும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலஞ்சேரி கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் 18 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு லோக ஷேமத்திற்காகவும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பூர்ணாஹூதி மகாதீபாராதனை செய்யப்பட்டு புனித நீரால் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை நாடி செல்வமுத்துக்குமரன், நாடி மாமல்லன் செய்து இருந்தனர்.

















