சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்றம் 300க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உடபட்ட தரங்கம்பாடி கடற்கரையில் உலக கடற்கரை தூய்மை தினத்தை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடற்கரை தூய்மை பணி கையெழுத்து இயக்கம் மரக்கன்று நடுதல் மற்றும் கடற்கரை தூய்மை உறுதிமொழி ஏர்ப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது தரங்கம்பாடி கடற்கரை தூய்மை பணியை மயிலாடுதுறை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆர். சங்கர் தலைமையேற்று தொடங்கி வைத்தார் இதில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் ,மற்றும் டெல்லி சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக அலுவலர் கௌரவ் குப்தா தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க மாவட்ட அலுவலர் ப்ரீதா தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க தலைவர் மதிவாணன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் தரங்கம்பாடி வட்டாட்சியர் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கல்லூரி மாணவர்கள் லயன்ஸ் சங்கத்தினர் தன்னார்வலர்கள் தூய்மை பணியாளர்கள் இணைந்து 300க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு சுமார் 750 கிலோ குப்பைகளை அகற்றி மரக்கன்றுகள் நட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.













