மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகள் துவங்கிய முதல் நாள், 524 பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது, மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார் :-
தமிழக அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான காலை உணவு திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் 514 பள்ளிகளிலும், மேலும் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியாக நகராட்சிகளிலும் அமைந்துள்ள துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இன்று தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் துவங்கிய நிலையில், மயிலாடுதுறை தேசிய துவக்க பள்ளியில், காலை உணவு திட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி குழந்தைகள் உடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரத்தை தொடர்ந்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.













