பள்ளி முதல் நாள், மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து, நெல்லில் அகரம் எழுத கற்றுக் கொடுத்து வகுப்பில் சேர்த்த ஆசிரியர்கள் மயிலாடுதுறையில் பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு :-
கோடை விடுமுறைக்கு பின்பு இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளும் இன்று காலை துவங்கின. மயிலாடுதுறையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தேசிய துவக்க பள்ளியில், மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கி, புத்தாடைகள் கொடுத்தனர். தொடர்ந்து நெல்லில் தமிழ் முதல் எழுத்தான அகரத்தை எழுத வைத்து ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் காலையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.













