கன்னியாகுமரி மாவட்டம்: இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிப்பு- குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேலும் கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் போட்டியிட்ட முதல் தேர்தலிலே 35 சதவீதம் வாக்குகளை பெற்று வரலாற்றில் முதன்முறையாக தனிப்பெரும் கட்சி என அந்தஸ்தை பெற்ற தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் அதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை தொடர்ந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் த.வெ.க. நிர்வாகி தொழிலதிபர் பால்ராஜ் ஏற்பட்டில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் தலைமையில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணைச் செயலாளர் பிரேம்குமார், மாநகர தலைவர் ரஞ்சித், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வாகை ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் காமராஜ் கண்ணன் ,கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். பேட்டி: எஸ்.ஆர்.மாதவன், தமிழக வெற்றிக் கழக குமரி மாவட்ட செயலாளர்

















