சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்
புறவழிச் சாலையில் இருந்து கிராமங்களுக்கு செல்ல சர்வீஸ் சாலை அமைக்க கோரியும் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிராமங்களுக்கு செல்வதற்குமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பத னிருப்பு பகுதியில் நாகை விழுப்புரம் நான்கு வழி சாலையில் 10 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புறவழிச்சாலையில் இருந்து நாங்கூர், மேல நாங்கூர், அல்லி விளாகம், செம்ப தனிருப்பு, காத்திருப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை என குற்றம்சாட்டியும் செம்பதனிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்க கோரியும் புறவழிச்சாலையில் பொதுமக்கள் பெண்கள் மாணவ மாணவிகளின் நலன் கருதி பேருந்து நிழற்குடை அமைத்து தர கோரியும் தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நான்கு வழி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த செம்பனார் கோயில் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, திருவெண்காடு இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

















