நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
ஆண் தேர்வர்களுக்கான அனுமதிக்கப்படாத ஆடை நடைமுறைகள்;
- முழு கைச்சட்டைகள் அணியக்கூடாது
- பெரிய பொத்தான்கள் கொண்ட பைகள், ஆடைகள்
•ஷுக்கள்
•கடிகாரங்கள், வளையல்கள்,சங்கிலிகள், குளிர் கண்ணாடிகள்(சன் கிளாஸ்) போன்ற எந்த ஆபரணங்கள்.
பெண் தேர்வர்களுக்கான அனுமதிக்கப்படாத ஆடை நடைமுறைகள்;
- முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி வடிவம் கொண்டவை
•ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பரமான ஆபரணங்கள்
•நகைகள்(காதணிகள், மூக்குத்திகள், சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகள்) - அதிக உயரம் கொண்ட (high) ஹீல்ஸ், ஷூக்கள், மூடிய நிலையில் வடிவமைக்கப்பட்ட காலணிகள்