விஜய்-க்கு வேண்டுகோள் வைத்த நயினார் நாகேந்திரன்..!

விஜய் எங்கள் கூட்டணிக்கு வருவது எங்களது வேண்டுகோள். ஆனால் வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம்.

மடப்புரத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி;

தமிழகத்தில் எங்கும் போதைப் பொருட்கள் இல்லாமல் முதலமைச்சர் பார்த்துக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் நான்கு வருடத்தில் 24 லாக்கப் படுகொலைகள் நடந்துள்ளது.

இடது கையில் சிகரெட் சூடு, தலையில், இருதயத்தில், கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அஜித் குமாரின் கொலையில் சம்பந்தப்பட்ட தலைமை செயலகத்தின் மேல் அதிகாரி யார்? அவரது பெயரை வெளியிட வேண்டும். பணி நியமன ஆணையை அருகிலுள்ளமதுரையில் வழங்காமல் காரைக்குடியில் வழங்கி இருப்பது கண் துடைப்பு. அஜித்தை அடித்து கொலை செய்த சிறப்பு படையினரையும் தலைமைச் செயலகத்தில் உள்ளவர்களையும் காப்பாற்றவும் அரசு முயற்சி செய்கிறது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. பொதுமக்கள் தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும்.

Exit mobile version