மை பாரத் கேந்திரா சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தும் வகையில் பாதயாத்திரை நிகழ்வு நடைபெற்றது .
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊவேரியில் செயல்படும் பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் ஐடிஐ வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை பெருந்தலைவர் நீதியரசர் பொன்.கலையரசன், அறங்காவலர்கள் சந்திரசேகரன், வெங்கடேசன், டாக்டர் கண்ணையன் டாக்டர் அரிஸ்டாட்டில் ஓய்வு பெற்ற மாவட்டம் நீதிபதி சாத்தப்பிள்ளை, விஜய சுந்தரம் ஆசிரியை ரேணுகா அருள் பொறியாளர் ராஜேந்திரன் அறக்கட்டளை செயலர் சாம்பசிவம் அறக்கட்டளை இயக்குனர் அருளரசு உள்ளிட்டோர் ஆணைப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம கலை நிகழ்ச்சிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் அலங்கார ஊர்தி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.பாதயாத்திரைகள் கலந்து கொண்ட ஐடிஐ மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சான்றுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. இளைஞர்களை நல்வழிப்படுத்துதல், அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்பதே இந்த பேரணையின் நோக்கம், இதில் இயக்குநர் டாக்டர் அருளரசு, கல்லூரி முதல்வர் பழனிச்சாமி, ஐடிஐ ஆசிரியர்கள் சத்யராஜ், சீனிவாசன் பார்த்தசாரதி மேலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














