May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோயில்

by Satheesa
September 1, 2025
in Bakthi
A A
0
முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோயில்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நவகைலாயத் திருத்தலங்களில் ஐந்தாவது தலம் திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாடு என்னுமிடத்தில் கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் காலத்தில் கோவில்பத்து என்று அழைக்கப்பட்டது.

இக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் காட்சியளிக்கிறார். இங்குள்ள இறைவி சிவகாமி ஆவார். கோயிலின் தீர்த்தம் தட்சிண கங்கை ஆகும். இக்கோயிலை கட்டியவர் வள்ளல் மகாராஜா மிருந்த முனிவர் பாதயாத்திரை செய்த இடமும் ஸ்ரீராமர் பாதம் பட்ட இடமும் காஞ்சனர் மலைக்கு மோட்சம் அளித்த இடமும் இதுவே ஆகும்.

சூரபத்மனும் மற்ற அரக்கர்களும் செய்த கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் “முறப்பநாடு’ என்ற பெயர் வந்ததாம்.
தாமிரபருணியின் மேற்கு கரையில் இக்கோயில் உள்ளது.

நவ கைலாசங்களில் இக்கோயில் ஐந்தாவது கைலாசமாகக் கூறப்படுகிறது. மூலவருக்கு எதிரே காணப்படுகின்ற நந்தி குதிரை முகத்துடன் உள்ளது. பைரவர்
சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னியர், நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீசுவரர் ஆகியோர் உள்ளனர்.

இந்த திருத்தலம் வியாழன் தலமாகும். நவக்கிரகங்களில் குருவிற்குரிய ஸ்தானத்தை பெறுகிறது. நவகைலாயங்களில் மற்ற தலங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த தலத்திற்கு உண்டு. காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. அதேபோல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை “தெட்சிணகங்கை’ என்கிறார்கள். இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது.

இக்கோயில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் காணப்படுகிறது. இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பிரகாரத்தில் சூரியன் அதிகார நந்தி ஜுரதேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.

சோழமன்னன் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குதிரை முகம் இருந்தது. இந்த முகம் மாற வேண்டி சிவபெருமானை எண்ணி பிரார்த்தித்தான் அரசன். சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். சோழனும் இங்கு வந்து நீராடினான். மன்னனின் மகள் முகம் மனித முகமாக மாறியது.

பின்னர் சோழ மன்னன் சிவபெருமானுக்கு இங்கு கோயிலை கட்டினான். இக்கோயிலை வல்லாள மகாராஜா என்பவர் கட்டியதாகவும் ஒரு வரலாறு உண்டு.

அகத்தியரின் சீடரான உரோமச மகரி~pக்கு சுவாமி இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை
முகத்துடன் இருக்கிறது. மன்னன் மகளின் குதிரை முகம் மாறியபோது, அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக்கொண்டதாம். எனவே இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள்.

இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம்போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை காலபைரவர் என்றும், வாகனம் இல்லாதவரை வீரபைரவர் என்றும் கூறுகின்றனர்.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பற்றாக்குறையாக இருக்கிறதே என்ற கவலை இல்லாத மனிதனே இல்லை.

பற்றாக்குறை நீங்க வேண்டுமானால், ஆசைகளை குறைக்க வேண்டும். ஆசைகள் குறைய வேண்டுமென்று மனிதன் பேசுகிறான், எழுதுகிறான். ஆனால், நடைமுறையில் முடியவில்லை. அப்படியானால், இந்த சக்தியை இறைவன் தான் தரமுடியும். அதே நேரம், நவீன காலத்திற்கேற்ப சில சாதனங்களும் நமக்கு தேவைபடத்தான் செய்கிறது. எப்படியோ கையிலே நாலு காசு இருந்தால் தான் உலகம் மதிக்கிறது.

ஆசை குறைய வேண்டுமானாலும், கையிலே காசு தங்க வேண்டுமானாலும் இக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.
இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “நடுகைலாயம்’ என்கின்றனர்.

இங்கு கைலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். சிவகாமி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். விநாயகருக்கு சன்னதி இருக்கிறது.

இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். விநாயகரை இத்தகைய அமைப்பில் காண்பது அபூர்வம்.

Tags: Kailasanathar TempleMurappanaduMurappanadu Kailasanathar Templesouth indian templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“கடைசி திரைப்படம் இதுதான்… கம்பெனியை மூடுகிறோம்” – தயாரிப்பு நிறுவனத்தை கைவிடுவதாக அறிவித்த வெற்றிமாறன்

Next Post

கூகுள் மேப்ஸ் குழுவை திருடர்கள் என சந்தேகித்து தாக்கிய கிராம மக்கள் – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி !

Related Posts

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்
Bakthi

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்
Bakthi

திருத்துறைப்பூண்டி முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா

May 3, 2026
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்
Bakthi

எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம் tvk தொண்டர்களால் பரபரப்பு

May 3, 2026
Next Post
கூகுள் மேப்ஸ் குழுவை திருடர்கள் என சந்தேகித்து தாக்கிய கிராம மக்கள் – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி !

கூகுள் மேப்ஸ் குழுவை திருடர்கள் என சந்தேகித்து தாக்கிய கிராம மக்கள் – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.