தரங்கம்பாடியில் அமைச்சர் வெங்கடரமணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொன்னார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி உள்ள பிரசித்தி பெற்ற ரேணுகா தேவி அம்மன் ஆலய ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் திருவிழாவில் ஆறாம் நாள் நிகழ்வில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கலந்து கொண்டார் கோவிலுக்கு வந்த அவருக்கு மாவட்ட மீனவ தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தார் பரிவட்டம் கட்டி ஆளுயர மாலை அணிவித்து அமைச்சரை மரியாதை செய்து அழைத்து சென்றனர் கோவிலில் தரிசனம் செய்த அமைச்சர் கோவிலில் அமர்ந்து பல்வேறு கோரிக்கைகளை கேட்டு அறிந்தார் மேலும் அங்கு கூடியிருந்த மீனவர்கள் மற்றும் பெண்கள் அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக பதில் அளித்தார் அமைச்சர் மேலும் தங்களுக்கு அரசு பள்ளி முழு வசதியுடன் வேண்டும் என கேட்டவர்களிடம் தங்கள் பிள்ளைகள் அரசு மற்றும் தனியார் பள்ளி எந்த பள்ளியில் படித்தாலும் படிப்பு ஒன்று தான் என்று கூறினார் மேலும் இந்த பகுதியில் உள்ள அனைத்து கோரிக்கைகள் குறைகளை கேட்டறிந்து விரைவில் முதல்வரிடம் ஆலோசித்து அவை செய்து தரப்படும் எனவும் கூறினார் மற்றவுடன் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலர் உடன் வந்திருந்தனர்.















