அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் அல்லது கமிஷன் கோறும் பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை இரண்டு அல்லது ஏழு நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதால் இடைத்தரகர்களை நம்பி குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சவுதி அரேபியாவில் மின் பிடி தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் உயிரிழந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர் ஆன தொடுவாய் கிராம மீனவர் மாவீரன் கீழ மூவர்கரை மீனவர் சங்கர் ஆகிய இருவரின் குடும்பத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தலா 10 லட்சம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன் கூறுகையில்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் விளைச்சல் மற்றும் அறுவடை கணக்கில் கொண்டு தற்போது 33 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப 130 வரை கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் தலா ஆயிரம் மூட்டைகள் கொள்ளளவுக்காண இடவசதி உள்ளது. நெல் வரத்து அதிகமானால் உடனடியாக நெல் மூட்டைகள் குடோன்களுக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரப்பதத்தை உறிஞ்சும் மற்றும் தூற்றும் இயந்திரங்கள் சாக்கு முட்டைகள் தார்பாய்கள் தட்டுப்பாடு இன்றி கையிருப்பில் உள்ளது. விவசாயிகளிடம் லஞ்சம் அல்லது கமிஷன் கோறும் பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை ஏழு நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதால் இடைத்தரகர்களை நம்பி குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் நடப்பாண்டு 9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என வேளாண்துறை மூலம் கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கொண்டுவரும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய அரசு முழு தயார் நிலையில் உள்ளது.















