மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் துரப்பன பணி மேற்கொள்வதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு:- சைடு ட்ராக்கிங் முறையில் பக்கவாட்டில் குழாய் அமைத்து ஒன்றரை கிலோ மீட்டருக்கு பூமியை அகழ்ந்து எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் போராட்டம்:-
காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி பல்வேறு இடங்களில் எண்ணெய்- எரிவாயு கிணறுகளை அமைத்துள்ளது. இவற்றில் பல கிணறுகளில் எண்ணெய்- எரிவாயு வளம் குறைந்து விட்டதால், கைவிடப்பட்ட கிணறுகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக அரசு டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக எந்த எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணியும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில முயற்சிகளையும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தி உள்ளதனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள பழைய எண்ணெய் எரிவாயு கிணறான Kut-9 என்ற கிணற்றில் மீண்டும் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி முயற்சி பதாகவும், இதற்காக மிகப்பெரிய ராட்சத குழாய்கள் லாரிகள் மூலம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜகோபாலபுரம் கிராமத்துக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஓஎன்ஜிசி கிணற்றை அண்மையில் பார்வையிட்டனர். இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஒத்த கருத்துடைய பிற அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தை நேரில் சந்தித்து அண்மையில் புகார் மனு அளித்தனர். ஆனால் ராஜகோபாலபுரத்தில் பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் மீட்டெடுத்திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஓஎன்ஜிசி கிணறு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்ட குழுவினரிடம் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ராஜகோபாலபுரம் எண்ணெய்- எரிவாயு கிணற்றில் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. மேலும் விமாதம் இருபதாம் தேதிக்கு பிறகு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி கிராம மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே மீண்டும் ஓஎன்ஜிசி கிணற்றில் பணிகளை தொடர வேண்டும் என வருவாய்த் துறையினர் அறிவுறுத்தினர். இதை எடுத்து போராட்ட குழுவினர் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.
பேட்டி பேராசிரியர் தா ஜெயராமன் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்.

















