தொடர் குற்ற சம்பவங்களின் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி உப்பனாறு பாலம் அருகே கடந்த 17.08.2026ம் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீர்காழி பாலசுப்ரமணியன் நகரைச் சேர்ந்த மோகன் மகன் கோபிநாத் (26), சிவசங்கர் மகன் சூர்யா (26) ஆகியோர் சீர்காழி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், இருவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கோபிநாத், சூர்யா ஆகியோரை சீர்காழி போலீசார் சிறையில் அடைத்தனர்..

















