திருத்தணி புதிய பேருந்து நிலையம் அருகே
கொல்லாபுரியம்மன் கோயில் பகா கும்பாபிஷேகம்
திருத்தணி,ஆக.30.
திருத்தணி புதிய பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் .புது வன்னாரப்பேட்டையில்40ஆண்டுகள் பழமையான கொல்லாபுரி அம்மன் கோயில் பக்தர் நன்கொடை பெற்று புதுப்பிக்கப்பட்டது.இக் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜையுடன் தொடங்கியது.கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றது.விழாவில் மூன்றாம் நாளானஇன்று காலை பூர்ணாஹுதி ஹோமம் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 9.15மணிக்கு விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.















