மணக்குடியில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ மஹாகணபதி ஆலய மஹா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தில் நேரு தெருவில் அமைந்துள்ள பழமையான
ஸ்ரீ மஹாகணபதி ஆலயத்தில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது நான்காவது கால யாகசாலை பூஜை நிறைவடைந்த நிலையில் யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க செம்பனார்கோவில் காவல் நிலைய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.















