காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் திறந்து வைத்தார்
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கில் புதியதாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதாகர்,சிந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இந்த பாக்ஸ் கிரிக்கெட் மைதானம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.826 கட்டணம் செலுத்தி இந்த மைதானத்தை பயன்படுத்திகொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு உள்ளது இதன் மூலம் கிரிக்கெட் பயிற்சி பெறுவோருக்கு இது அரிய வாய்ப்பாக அமையும் பின்னர் ஆட்சியர் லீலா அலெக்ஸ் தங்கும் வசதியுடன் கூடிய உணவு விடுதியை ஆட்சியர் ஆய்வு செய்தார் இதில் உணவின் தரம் குறித்தும் சாப்பிட்டு பார்த்து தரம் குறித்தும் அறிந்தார்















