காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுநாங்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பூர்ண புஷ்கிலாம்பிகா சமேத ஏறுடையப்ப அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. அப்பகுதி கிராம காவல் தெய்வமாகவும், பல்வேறு குடும்பங்களின் குலதெய்வமாகவும் விளங்கும் இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயம் முன்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு, யாகசாலையில் புனித நீர் வைக்கப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. இன்று காலை இரண்டாவது யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், மகா பூர்ணகுதி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அய்யனாருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.














