September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தாராபுரம் அருகே மொபட் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவி துடிதுடித்து பலி

by sowmiarajan
January 6, 2026
in News
A A
0
தாராபுரம் அருகே மொபட் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவி துடிதுடித்து பலி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பள்ளிக்குச் செல்வதற்காகச் சாலையைக் கடக்க முயன்ற பிளஸ்-2 மாணவி மீது முருக பக்தர்கள் வந்த வேன் மோதி கவிழ்ந்ததில், மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 16 பக்தர்கள் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நல்லிகவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் தாராபுரம் சர்ச் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கோபிகா (17), தாராபுரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். மாணவி கோபிகா தினந்தோறும் தனது கிராமத்திலிருந்து மொபட்டில் புறப்பட்டு, தாராபுரம் – பழனி சாலையில் உள்ள தாசவநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் வரை வருவார். அங்குத் தனது மொபட்டை நிறுத்திவிட்டு, பின்னர் பேருந்து மூலம் பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வழக்கம்போல் கோபிகா தனது மொபட்டில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். தாசவநாயக்கன்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்தது. திருப்பூரைச் சேர்ந்த முருக பக்தர்கள் பழனி கோவிலுக்குச் சென்றுவிட்டு, காங்கயம் நோக்கி வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதிவேகமாக வந்த வேன், சாலையைக் கடந்த கோபிகாவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனுக்கு அடியில் சிக்கிய மாணவி கோபிகா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த காங்கயத்தைச் சேர்ந்த செல்வ பரணிதரன் (27), குமாரசாமி (60), ஜவகர் (45), பழனிச்சாமி (40), செந்தில், சுகுமார், தாமரைக்கண்ணன், சேனாதிபதி உள்ளிட்ட 16 பக்தர்கள் காயமடைந்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த அலங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டுத் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாணவி கோபிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்குச் சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் நல்லிகவுண்டன் வலசு கிராமத்திலும், தாராபுரம் பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் – பழனி சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: accidentcollisionDharapuramoverturnvan Moped
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போதை இல்லா தமிழகத்தை படைப்போம்: பழனியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான்

Next Post

காரியாபட்டி அருகே பயங்கரம் வேலைக்குச் சென்ற கொத்தனார் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.