நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற தெலுங்கு நகைச்சுவை திரைப்படத்தில் நடித்திருந்தார். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கீர்த்தி சுரேஷின் அழகு, நேர்த்தியான நடிப்பு மற்றும் காமெடி டைமிங்க் ஆகியவை பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன. இப்படத்தில் சுகாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மனஅழுத்தம் அல்லது அப்செட் ஆனால் என்ன செய்வேன் என்கிற கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி, தனது மனநிலையை சமநிலைப்படுத்தும் சில செயல்களை பகிர்ந்துள்ளார்.
“நான் அப்செட் ஆனால், நல்லா சாப்பிடுவேன். அப்புறம் காரை எடுத்துக் கொண்டு தனியாக ட்ரைவு போவேன். அப்போ நல்ல மெல்லிசை கேட்பேன். அதுமட்டுமல்லாமல், நம்ம வீட்டு நாய்க்குட்டி முகத்தை பாத்தாலே எல்லா கவலையும் மறந்துடுவேன்,” என தெரிவித்துள்ளார்.
இந்தப் பகிர்வு மூலம், கீர்த்தி சுரேஷ் தனது சாதாரணமான, மனம் திறந்த பக்கம் மற்றும் தனக்கான மனஅமைதி நிலையை பராமரிக்கும் வழிகளை ரசிகர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.