கன்னியாகுமரி மாவட்டம்: ரியல் எஸ்டேட் நடத்துபவர்களுக்காக குடியிருப்புகளை காலி செய்ய நீர்வளத்துறை நெருக்கடி – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு மனு கொடுத்தனர்- நான்கு தலைமுறைக்கு மேல் வசித்து வந்த குடியிருப்புக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மாடன் கோவில் தெருவில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக நான்கு தலைமுறைகள் 58 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அப்போதைய முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் பட்டா வழங்கப்பட்டது பிறகு 2000 ஆம் ஆண்டின் முதல்வர் கலைஞர் அவர்களால் 22 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள வீட்டு மனைகளுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு மின் இணைப்பு குடிநீர் இணைப்பு போன்ற அனைத்தும் தமிழக அரசால் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மீதமுள்ள வீட்டுமனைகளுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கப்பெறும் என நம்பிக்கையை தங்களது வாழ்வாதாரத்தை அப்பகுதியிலேயே நடத்தி வந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு திடீர் அதிர்ச்சியாக. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியை காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் ஒட்டியதால் அதிர்ச்சி அடைந்த அடைத்தனர். மேலும் அப்பகுதிக்கு அருகாமையில் ரியல் எஸ்டேட் வீட்டு மனை விற்பனை அதிகம் நடைபெற்று வருவதால் ரியல் எஸ்டேட்டின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. எனவே ரியல் எஸ்டேட் நடத்துபவருக்காக திடீரென நான்கு தலைமுறையாக வசித்து வரும் எங்களது வீட்டு மனைகளை காலி செய்ய வேண்டும் என நீர்வளத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றசட்டி வருகின்றன. தொடர்ந்து மீதமுள்ள வீடுகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் நான்கு தலைமுறைக்கு மேல் வசித்த பகுதியிலேயே வசிப்பதற்கான உத்தரவாதம் தரவேண்டும் என என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
















