விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் மூலம் 2164 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்காக ரூபாய் 23 கோடியே 43 லட்சத்து 57 ஆயிரம் தீர்வு தொகை வழங்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் 13 கிளை நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்து இன்று மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகள் வாரா கடன் வழக்கு, விபத்து வழக்கு ,சொத்து வழக்கு, கடன் வழக்கு உள்ளிட்ட 2839 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் வாரா கடன் வழக்கு 141 வழக்குகள் உட்பட 2164 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அதற்காக ரூபாய் 23 கோடியே 44 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் தீர்வு தொகையாக வழங்கப்பட்டது மக்கள் நீதிமன்றத்தை இன்று ஒருங்கிணைந்த நீதிபதி மணிமொழி துவக்கி வைத்து விபத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகையை காசோலை மூலம் வழங்கினார் தொடர்ந்து அவர் பேசுகையில் குடும்ப நல வழக்கு, வாராக்கடன், வங்கி கடன், விபத்து வழக்கு உள்ளிட்ட வழக்குகளை மக்கள் நீதிமன்ற மூலம் தீர்வு காணுவதால் குறைந்த செலவில் மன நிறைவான தீர்ப்பு கிடைக்கிறது மேலும் இந்த தீர்ப்பு இறுதியாக செயல்படுத்தப்படுகிறது இதனால் நீதிமன்றங்களில் வழக்கு குறைகிறது மக்கள் மனநிறையுடன் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றனர் பெரும்பாலான வழக்குகள் இதன் மூலம் தீர்வு காணப்படுவதால் வழக்குகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .இதில் நீதிபதிகள் வழக்கறிஞர் வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

















