பதிருவள்ளூரில் உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் சியாட்சி வரை உள்ள தூரமான 3964 கிலோ மீட்டர் குறிக்கும் 3964 அடி நீளமுள்ள மூவர்ண தேசியக்கொடியை 4, ஆயிரம் மாணவர்கள் கையில் ஏந்தியவாறு நடைபெற்ற பேரணி சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் மீனம்பாக்கம் அரிமாசங்கம் சார்பில் 77,ஆவது குடியரசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். இந்தப் பேரணி தேசிய பெருமையும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு விதமாக பேரணி நடைபெற்றது. இதில் 4000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, கன்னியாகுமரி முதல் சியாட்சி வரையிலான 3964 கிலோ மீட்டர் குறிக்கும் வகையில் 3964 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான மூவர்ண தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு உலக அமைதி வேண்டி பேரணியாகச் சென்றனர். இந்த சாதனை சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், மீனம்பாக்கம் அரிமாசங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

















