கன்னியாகுமரி மாவட்டம்: தமிழக நடப்பாண்டு பட்ஜெட்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது -இதனால் இஸ்லாமியர்களுக்கு எந்த பயனும் இல்லை-வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்- கட்டாயமாக வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றால் இதற்காக சிறை செல்ல இஸ்லாமியர்கள் தயார் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பின் செயற்குழு கூட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நடைபெற்றது கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கும் தமிழக அரசின் தாக்கல் செய்த புதிய பட்ஜெட் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாட வேண்டும் இல்லையெனில் மூனறாண்டுகள் சிறை என மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது இதற்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்தே மாதரம் பாடல் ஒரே இறைவனை வணங்குபவர்கள் மீது இறைவனே இல்லை என்று கூறுபவர்கள் மீது வெவ்வேறு கடவுள்களை வணங்குபவர்கள் மீது திணிக்கப்படுகின்றன அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான பாடலாகும் இப்பாடலை கட்டாயமாக்கும் சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும் எனவே இந்தச் சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் கட்டாயமாக பாட வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் சிறை செல்ல தயார் என தெரிவித்தார்.
தமிழக நடைபாண்டு பட்ஜெட் இரண்டு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது அதில் இஸ்லாமியர்களுக்கு என புனித ஹஜ் யாத்திரைக்காக மானியம் 25,000 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மானிய அறிவிப்பு இஸ்லாமியர்களுக்கு எவ்வித பயனும் இல்லை ஹஜ் பயணத்திற்காக ஒதுக்கப்பட்ட மானிய நிதிக்கு பதிலாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வய்ப்புகளில் நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் . தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ஆனது முந்தைய பட்ஜெட்டின் ஸ்டிக்கர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அறிவித்த புதிய பட்ஜெட்டில் எந்த பயனும் இல்லை என தெரிவித்தார்.













