மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து, உற்சாகத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய ஊழியர்கள் , அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இணை ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ஊழியர்கள் பங்கேற்ற பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலுவலக முகப்பில் பண்ண கோலங்களிட்டு கரும்புகள் கட்டப்பட்டது. தொடர்ந்து செங்கல்லால் அடுப்பு செய்து, மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கி வரும் சமயம் ஊழியர்கள் சுற்றி நின்று பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பினர். இந்து அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான ஊழியர்கள் தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை, கூரைப்பட்டு, பட்டுப் புடவை அணிந்து தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.














