திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் செல்போன் பேசிக்கொண்டு அலட்சியமாக இருந்த அரசு அதிகாரிகள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை,நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குறைகளை கோரிக்கை மனுவாக கொடுப்பது வழக்கம்.
இதனால் வருவாய்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, வனத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வருகின்றனர்.
அதேபோல் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுகளை வாங்க வருகிறார்.
ஆனால் அதிகாரிகள் செல்போன் பேசிக்கொண்டும் சில அதிகாரிகள் தூங்கி ஒருவர் பேசிக் கொண்டு அலட்சியமாக உள்ளனர்.
இது போன்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















