நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்கும் அறிவிப்பு போதுமானது அல்ல, மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் பேட்டி, தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை எனவும், ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே அளித்து வருவதாகவும் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறும் பொழுது, தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த தேர்தலில், நெல்லுக்கு குவிண்டால் 3500 விலை கிடைக்கும் வகையில் ஆதாரத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர், ஆனால் தற்பொழுது 2750 மட்டுமே சன்ன ரகத்திற்கு கிடைக்கிறது. இந்த அறிவிப்பு போதுமானது அல்ல, தமிழக அரசு 3500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், இது போல் கரும்பு காண ஆதாரம் விலையும் போதுமானது அல்ல என்று தெரிவித்தார். மத்திய பாஜக அரசு மோசடியான வழியில் தங்கள் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தி ஆர் எஸ் எஸ் சட்டங்களை உள்ளே கொண்டு வர முயற்சி செய்கிறது. அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தொகுதி வரையறை சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறது . மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றி அதில் மத்திய அரசின் பங்களிப்பை குறைத்து விட்டனர், இதனால் இந்த திட்டம் செயல்படுத்த முடியாது நிலைமை உள்ளது. தமிழக அரசு, திருமண உதவித் திட்டம் அறிவித்துள்ளது, ஆதரவற்ற பெண்களுக்கு ஐந்து ஆண்டுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது, தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வேலை ஏற்ற இளைஞர்களுக்கு மாதம் நான்காயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை 2,500 உள்ளிட்ட விடுபட்ட வாக்குறுதிகளை மானிய கோரிக்கைகள் விவாதத்தின் போது நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கின்றோம். காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரப் பிரச்சினையாகும் இதில் மாறுபட்ட கருத்தோடு தமிழக கட்சிகள் இருப்பது நல்லதல்ல, தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்கள் கருத்தாகும். தமிழகத்தில் நாங்கள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றோம். குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் என்பது நிவாரணம் அல்ல, வருடம் தோறும் ஒவ்வொரு அரசும் அறிவிக்கின்ற அது செயல்திட்டம், இதனை நிவாரணம் என்று கருதக்கூடாது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருவதால், தமிழக அரசே அதனை ஏற்று நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். என்று தெரிவித்தார். பேட்டி போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்













