சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாய முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்த போலீசார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாய முன்னணி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் ‘தேசம் தழுவிய மறியல் போராட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கோரிக்கைகள்:
தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
விவசாய விளை பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை (C2 + 50\%) வழங்க வேண்டும்.
விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விபிஜி ராம் ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும்.
அங்கன்வாடி திட்டப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியத்தை ₹42,000 ஆக உயர்த்த வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும்.
விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.













