ஆதிதிராவிடர் மக்களுக்காக வழங்கப்பட்ட 3.1 ஏக்கர் நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்து அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் வாகனத்தை சார்பு நீதிமன்ற உத்தரவின் படி பறிமுத செய்ய வந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மரிமானி குப்பம் பகுதியில் 1986 ஆம் வருடம் ஆதிதிராவிடர் இன மக்களுக்காக 3.1 ஏக்கர் நிலம் வழங்கப்பட்ட நிலையில்…
திடீரென தமிழக அரசு அந்த நிலங்களை ஆர்ஜிதம் செய்து கொண்டு சென்றதால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தை நாடிய போது ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் வீதம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என மொத்தமாக சுமார் நான்கரை கோடி ரூபாய் தொகையை நிர்ணயத்தில் அரசு ஒன்றரை கோடி ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்க மறுத்ததால் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறி திருப்பத்தூர் சார்பு நீதிமன்றம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வாகனங்கள் 50க்கும் மேற்பட்ட கணினிகள் நாற்காலி மேசைகள் உள்ளிட்டவைகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி இன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் பறிமுதல் செய்ய வந்த வாகனங்கள் மறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நாளை வந்து பறிமுதல் செய்ய போகிறோம் என்று வழக்கறிஞர்கள் கூறிச் சென்றது குறிப்பிடத்தக்கது.













